சந்நிதி முருகனுக்கு புதிய குதிரை

கதிரிப்பாய்  மக்களின் பங்களிப்பில் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் சந்நிதி முருகனுக்கு புதிய குதிரை வாகனம்  ஒன்று செய்யப்பட்டு கார்த்திகை தீப திருநாள் அன்று (25-11-2015) சம்பிருதாய பூர்வமாக உபயம் செய்யப்பட்டது. சுமார் எட்டு அடி உயரமும்  600 kg  நிறையும்  கொண்ட இக்குதிரை வாகனம் இலங்கையிலேயே பெரிய குதிரை வாகனமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.